Book Title: அலையும் மனமும் வதியும் புலமும்

Authors: chandra1200 and Chandravathanaa

Cover image for அலையும் மனமும் வதியும் புலமும்

Book Description: இவை புலத்துக் கதைகள் - அப்போதெல்லாம் குளிர் மூக்கு நுனியில் கொடுவாளாய் குந்தியிருக்கும். நாக்கு உறைப்புக்கும், புளிப்புக்குமாய் அந்தரிக்கும். கனவுகளிலும், நினைவுகளிலும் அம்மாவும், அப்பாவும், சகோதரர்களும் நடமாடிக் கொண்டேயிருப்பார்கள். ஊர் வீடும், வீதிகளும் மூளையின் ஏதோ ஒரு பகுதியில் வளைந்து, நெளிந்து கொண்டிருக்கும். இரவுகளின் விழிப்புகளில் தவிர்க்க முடியாததாய் துயர் படிந்து இருக்கும். ஜேர்மனியின் எங்காவது ஒரு பகுதியில் யாரோ ஒரு வெளிநாட்டவரின் வீடு நாசிகளால் எரிக்கப் பட்டு விட்டது என்ற செய்தியோ அன்றி ஒரு வெளிநாட்டவர் நாசிகளால் நையப்புடைக்கப் பட்டு விட்டார் என்ற செய்தியோ இடையிடையே வந்து கிலி கொள்ள வைக்கும். பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுகளுக்காய் அழுவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

License:
Creative Commons Attribution NonCommercial NoDerivatives

Contents

Book Information

Book Description

இருப்பை இடம் பெயர்த்து
புலத்துக்கு மாற்றி விட்டு
விருப்போடு அமர முடியாது
வாடியிருந்த பொழுதுகளையும்,
மொழி, கலாச்சாரம், பண்பாடு, காலநிலை…
என்று எல்லாவற்றிலும் வேறுபட்ட
புலம் பெயர் தேசத்தில்
வசப்பட்ட வாழ்வையும்
கூறும் கதைகள்!

Authors

chandra1200 and Chandravathanaa

Metadata

Title
அலையும் மனமும் வதியும் புலமும்
Authors
chandra1200 and Chandravathanaa